Thursday, 26 October 2023

தேசிய போர் நினைவுச்சின்னம் (இந்தியா)

தேசிய போர் நினைவுச்சின்னம் (இந்தியா)
தேசிய போர் நினைவுச்சின்னம் (National War Memorial) என்பது இந்திய பாதுகாப்புப் படைகளை ஏனெனில் கௌரவிப்பதற்காக புது தில்லி இந்தியா வாயிலின் அருகே இந்திய அரசு கட்டிய நினைவுச்சின்னமாகும். இந்த நினைவுச்சின்னம் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. இந்தியா வாயில் அருகே தற்போதுள்ள விதானத்தைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. நினைவுச் சுவர் தரையிலும், இருக்கும் அழகியலுடன் இணக்கமாகவும் உள்ளது. [5] 1947-48 இந்திய-பாக்கித்தான் போர், 1961 (கோவாபடையெடுப்பு), 1962 (சீனப்போர்), இந்தியா-பாகிஸ்தான் போர், 1965, 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர், 1987 (சியாச்சின்), 1987-88 (இலங்கை), 1999 (கார்கில்) மற்றும் பிற ஆயுத மோதல்களின் போது தியாகிகளான ஆயுதப்படை வீரர்களின் பெயர்கள் 'ஆபரேஷன் ரக்சக்' போன்ற செயல்பாடுகள் நினைவுச் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
‹br› அமைவிடம்‹br› அருகிலுள்ள இளவரசி பூங்கா பகுதியில் ஒரு தேசிய போர் அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள்ளது. இளவரசி பூங்கா இந்தியா நுழைவாயிலுக்கு வடக்கே 14 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது கட்டப்பட்ட பாராக் போன்ற தங்கும் வசதிகள் உள்ளன. 1947 முதல், புதுதில்லியில் உள்ள சேவை தலைமையகத்தில் பணியமர்த்தப்பட்ட நடுத்தர அளவிலான ஆயுதப்படை அதிகாரிகளுக்கு இது குடும்பங்கள் தங்குமிடமாக செயல்பட்டு வருகிறது.[7] முன்மொழியப்பட்ட தேசிய போர் அருங்காட்சியகம் மற்றும் தேசிய போர் நினைவுச்சின்னம் மெட்ரோ மூலம் இணைக்கப்பட்டுள்ளது. போர் நினைவு மற்றும் அருங்காட்சியகத்தின் கட்டுமானத்திற்கு 500 கோடி (அமெரிக்க $ 70 மில்லியன்) செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‹br› SALEM - DISTRICT LEVEL COMPETITION ‹br› M.SOWMIYA‹br› GHS, KOONANDIYUR

Wednesday, 30 December 2020

வரலாற்றில் இன்று 31.12.2020 / history of today 31.12.2020 / varalaril inru 31.12.2020

திசம்பர் 31 கிரிகோரியன் ஆண்டின் 365 ஆம் நாளாகும்.

நெட்டாண்டுகளில் 366 ஆம் நாள்.

இது ஆண்டின் இறுதி நாள் ஆகும்.

நிகழ்வுகள்

535 – பைசாந்திய இராணுவத் தளபதி பெலிசாரியசு சிசிலி மீதான முற்றுகையை வெற்றிகரமாக முடித்தான்.

1225 – வியட்நாமின் 216 ஆண்டு கால லீ வம்ச அரசு முடிவுக்கு வந்து, டிரான் வம்சம் ஆட்சியைப் பிடித்தது.

1600 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.

1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.

1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பலர் தமது பலகணிகளை செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள்.

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: கியூபெக் சமரில் பிரித்தானியப் படைகள் அமெரிக்க விடுதலைப் படையின் தாக்குதலை முறியடித்தன.

1847 – ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.

1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேற்கு வேர்ஜீனியாவை கூட்டணியில் இணைப்பதற்கான சட்டமூலத்தில் ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டதில் வேர்ஜீனியா இரண்டாகப் பிரிந்தது.

1879 – வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.

1881 – இலங்கை முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.[1]

1923 – லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: அங்கேரி நாட்சி செருமனி மீது போரை அறிவித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: மேற்குப் போர்முனையின் கடைசிப் போர் நார்ட்வின்ட் நடவடிக்கை ஆரம்பமானது.

1946 – அமெரிக்க அரசுத்தலைவர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

1963 – மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாகக் கலைந்தது. சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகள் உருவாகின.

1965 – மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1968 – உலகின் முதலாவது சூப்பர்சோனிக் பயணிகள் விமானம் துப்போலெவ் டி.யு-144 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.

1981 – கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் இல்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

1983 – நைஜீரியாவில் இராணுவத் தளபதி மேஜர் முகம்மது புகாரி தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இரண்டாவது நைஜீரியக் குடியரசு கலைந்தது.

1984 – ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.

1986 – புவேர்ட்டோ ரிக்கோவில் சான் வான் நகரில் உணவுசாலையை அதன் மூன்று ஊழியர்கள் தீ வைத்ததில், 97 பேர் உயிரிழந்தனர், 140 பேர் காயமடைந்தனர்.

1987 – ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1991 – சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குள் அனைத்து அரசு நிறுவனங்களும் செயலிழந்தன.

1992 – செக்கோசிலோவாக்கியா கலைக்கப்பட்டு செக் குடியரசு, சிலோவாக்கியா என இரு நாடுகளாகப் பிரிந்தது.

1994 – முதலாம் செச்சினியப் போர்: உருசிய இராணுவம் குரோசுனி மீது தாக்குதலை ஆரம்பித்தது.

1994 – பீனிக்சு தீவுகள், மற்றும் லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.

1999 – 20-ஆம் நூற்றாண்டு, 2-ஆம் ஆயிரமாண்டு ஆகியவற்றின் கடைசி நாள்.

1999 – உருசியாவின் முதலாவது அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகினார். பிரதமர் விளாதிமிர் பூட்டின் அரசுத்தலைவரானார்.

1999 – 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.

1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 ஐக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இசுலாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து 190 பணயக்கைதிகளையும் விடுவித்துவிட்டு விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.

2004 – உலகின் அப்போதைய மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

2006 – ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது.

2009 – நீல நிலவும் நிலவு மறைப்பும் நிகழ்ந்தன.

2011 – நாசா இரண்டு கிரெயில் செயற்கைக்கோள்களின் முதலாவதை நிலாவின் சுற்றுவட்டத்துள் செலுத்தியது.

2014 – சாங்காயில் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்ட நெரிசலில் 36 பேர் உயிரிழந்தனர், 49 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1491 – இழ்சாக் கார்ட்டியே, பிரான்சிய கடற்படை அதிகாரி, நாடுகாண் பயணி (இ. 1557)

1514 – ஆண்ட்ரியசு வெசாலியசு, பெல்ஜிய உடற்கூற்றியலாளர், மருத்துவர் (இ. 1564)

1738 – காரன்வாலிஸ், பிரித்தானிய இந்தியாவின் 3வது தலைமை ஆளுநர் (இ. 1805)

1815 – ஜார்ஜ் கார்டன் மீடு, அமெரிக்க இராணுவ அதிகாரி, பொறியியலாளர் (இ. 1872)

1864 – இராபர்ட் கிராண்ட் ஐத்கென், அமெரிக்க வானியலாளர் (இ. 1951)

1869 – ஆன்றி மட்டீசு, பிரான்சிய ஓவியர், சிற்பி (இ. 1954)

1878 – எலிசபெத் ஆர்டன், கனடிய தொழிலதிபர் (இ. 1966)

1905 – எலன் தோடுசன் பிரின்சு, அமெரிக்க வான்யலாளர் (இ. 2002)

1910 – டி. எஸ். துரைராஜ், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1986)

1929 – ச. வே. சுப்பிரமணியன், தமிழறிஞர் (இ. 2017)

1935 – சல்மான், சவூதி அரேபிய மன்னர்

1943 – ஜான் டென்வர், அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 1997)

1943 – பென் கிங்ஸ்லி, ஆங்கிலேய நடிகர்

1947 – நாஞ்சில் நாடன், தமிழக எழுத்தாளர்

1989 – பிரியா பவானி சங்கர், இந்தியத் திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்

இறப்புகள்

335 – முதலாம் சில்வெஸ்தர் (திருத்தந்தை)

1691 – இராபர்ட் வில்லியம் பாயில், அயர்லாந்து வேதியியலாளர், இயற்பியலாளர் (பி. 1627)

1719 – ஜான் பிளேம்சுடீடு, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1646)

1876 – கத்தரீன் லபோரே, பிறரன்பின் புதல்வியர் துறவற சபையின் அருட்சகோதரி, பிரான்சியப் புனிதர் (பி. 1806)

1913 – சேத் கார்லோ சாண்டிலர், அமெரிக்க வானியலாளர் (பி. 1846)

1940 – விஸ்வநாத தாஸ், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், நாடக கலைஞர் (பி. 1886)

1973 – அலெக்சாந்தர் விசோத்சுகி, உருசிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1888)

1984 – கே. ஆர். ராமநாதன், இந்திய இயற்பியலாளர் (பி. 1893)

1986 – ராஜ் நாராயணன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1917)

1994 – கரவை கந்தசாமி, ஈழத்து இடதுசாரி அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி

2001 – தொ. மு. சிதம்பர ரகுநாதன், தமிழக எழுத்தாளர் (பி. 1923)

2011 – இராணி ஜெத்மலானி, இந்திய மனித உரிமை செயற்பாட்டாளர், வழக்கறிஞர்

Tuesday, 29 December 2020

வரலாற்றில் இன்று 30.12.2020 / history of today 30.12.2020

நிகழ்வுகள்

1066 – எசுப்பானியாவின் கிரனாதாவில் அரச மாளிகையைத் தாக்கிய முசுலிம் கும்பல் ஒன்று யோசப் இப்னு நக்ரேலா என்ற யூதத் தலைவரை சிலுவையில் அறைந்து கொலை செய்து, நகரில் உள்ள பெரும்பாலான யூத மக்களைக் கொன்றனர்.

1460 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தில் யோர்க்கின் 3வது இளவரசர் ரிச்சார்டை லங்காசயர் மக்கள் கொலை செய்தனர்.

1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானியப் படையினர் நியூ யார்க்கின் பஃபலோ நகரை தீயிட்டு அழித்தனர்.

1853 – ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக மெக்சிக்கோவிடம் இருந்து 76,770 சதுரகிமீ பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.

1896 – பிலிப்பீன்சின் தேசியவாதி ஒசே ரிசால் மணிலாவில் எசுப்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.

1897 – பிரித்தானியக் குடியேற்ற நாடான நட்டால் சூலிலாந்தை இணைத்துக் கொண்டது.

1903 – சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் குறைந்தது 605 பேர் இறந்தனர்.

1906 – அகில இந்திய முசுலிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

1916 – உருசிய மந்திரவாதியும் உருசியப் பேரரசரின் ஆலோசகருமான கிரிகோரி ரஸ்புடின் இளவரசர் பெலிக்சு யுசுப்போவின் ஆதரவுப் படைகளினால் கொல்லப்பட்டார். இவரது உடல் மூன்று நாட்களின் பின்னர் மாஸ்கோ ஆறொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

1916 – அங்கேரியின் கடைசி மன்னராக முதலாம் சார்லசு முடிசூடினார்.

1922 – சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

1924 – யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

1924 – நாள்மீன்பேரடைகள் பலவற்றின் இருப்பு பற்றி எட்வின் ஹபிள் அறிவித்தார்.

1941 – மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரசு தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.

1943 – சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.

1947 – பனிப்போர்: உருமேனியாவின் மன்னர் முதலாம் மைக்கேல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1949 – இந்தியா சீனாவை அங்கீகரித்தது.

1965 – பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்சின் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1972 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீதான குண்டுத் தாக்குதல்களை இடைநிறுத்தியது.

1993 – இசுரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.

1996 – அசாம் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்றில் போடோ போராளிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

1997 – அல்ஜீரியாவில் நான்கு ஊர்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 400 பேர் கொல்லப்பட்டனர்.

2000 – பிலிப்பீன்சின் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளில் 22 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

2004 – அர்கெந்தீனாவின் புவனெசு ஐரிசு நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 194 பேர் உயிரிழந்தனர்.

2006 – எசுப்பானியாவில் மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம் மீது எட்டா போராளிகள் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

2006 – முன்னாள் ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.

2006 – நடுக்கடலில் ஏற்பட்ட புயலில் 850 பயணிகளுடன் சென்ற செனாபதி நுசந்தாரா என்ற இந்தோனீசியக் கப்பல் கடலில் மூழ்கியது. 400 பேர் வரை உயிரிழந்தனர்.

2006 – முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

2013 – காங்கோ தலைநகர் கின்சாசாவில் அரசு-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை அடுத்து 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

39 – டைட்டசு, உரோமைப் பேரரசர் (இ. 81)

1865 – இரட்யார்ட் கிப்ளிங், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1936)

1879 – இரமண மகரிசி, இந்திய மதகுரு, மெய்யியலாளர் (இ. 1950)

1887 – கே. எம். முன்ஷி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1971)

1895 – எஸ். இராமநாதன், தமிழக அரசியல்வாதி (இ. 1970)

1917 – பாய் மோகன் சிங், இந்திய மருந்தியல் தொழில் முன்னோடி

1923 – பிரகாஷ் வீர் சாஸ்திரி, இந்திய அரசியல்வாதி, சமக்கிருத அறிஞர் (இ. 1977)

1930 – தூ யூயூ, நோபல் பரிசு பெற்ற சீன மருத்துவர்

1950 – பியார்னே இசுற்றூத்திரப்பு, தென்மார்க்கு கணினி அறிவியலாளர்

1975 – டைகர் வுட்ஸ், அமெரிக்க குழிப்பந்தாட்ட வீரர்

இறப்புகள்

274 – முதலாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)

1896 – ஒசே ரிசால், பிலிப்பீனிய ஊடகவியலாளர் (பி. 1861)

1916 – கிரிகோரி ரஸ்புடின், உருசிய மந்திரவாதி (பி. 1869)

1944 – ரோமைன் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1866)

1947 – ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், ஆங்கிலேய-அமெரிக்க கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1861)

1968 – திறிகுவே இலீ, நோர்வே அரசியல்வாதி, ஐநாவின் 1வது பொதுச் செயலர் (பி. 1896)

1971 – விக்கிரம் சாராபாய், இந்திய இயற்பியலாளர் (பி. 1919)

1973 – வி. நாகையா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1904)

1988 – இசாமு நொகுச்சி, அமெரிக்க சிற்பி (பி. 1904)

1997 – ப. சிங்காரம், தமிழக எழுத்தாளர் (பி. 1920)

2006 – சதாம் உசேன், ஈராக்கின் 5வது அரசுத்தலைவர் (பி. 1937)

2006 – சந்திரலேகா, பரத நாட்டியக் கலைஞர் (பி. 1928)

2009 – விஷ்ணுவர்தன், கன்னடத் திரைப்பட நடிகர் (பி. 1949)

2010 – பொபி ஃபாரெல், பொனி எம் பாப் இசைக் குழு உறுப்பினர் (பி. 1949)

2012 – ரீட்டா லெவி மோண்டால்சினி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய மருத்துவர் (பி. 1909)

2013 – கோ. நம்மாழ்வார், தமிழ்நாட்டு இயற்கை ஆர்வலர் (பி. 1938)

2014 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1949)

2014 – பீ. ஜீ. வர்கீஸ், இந்திய இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1927)

இன்றைய தின சிறப்பு.

ரிசால் நாள் (பிலிப்பீன்சு)

Monday, 28 December 2020

வரலாற்றில் இன்று 29.12.2020 / history of today 29.12.2020

திசம்பர் 29 (December 29) கிரிகோரியன் ஆண்டின் 363 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 364 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் இரு நாட்கள் உள்ளன



‹head›‹/head› நிகழ்வுகள்

875 – இரண்டாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடி சூடினார்.
1170 – கேன்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றியின் ஆட்களால் கேன்டர்பரி ஆலயத்தினுள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவர் பின்னர் ஆங்கிலக்க, கத்தோலிக்கப் புனிதராக ஏற்கப்பட்டார்..
1427 – மிங் சீன இராணுவம் அனோயில் இருந்து விலகியது.
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானியப் போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் கைப்பற்றினர்.
1835 – மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1845 – டெக்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.
1851 – அமெரிக்காவின் முதலாவது இளைய கிறித்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பாஸ்டனில் அமைக்கப்பட்டது.
1874 – எசுப்பானியாவில் இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து அங்கு மன்னராட்சி மீண்டும் கொண்டுவரப்பட்டது. பன்னிரண்டாம் அல்போன்சோ புதிய மன்னராக முடிசூடினார்.
1876 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் தொடருந்துப் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் உயிரிழந்தனர்.
1890 – வூண்டட் நீ படுகொலை: தென் டகோட்டாவில் அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 300 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.
1911 – மங்கோலியா சிங் சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது. போகடு கான் மங்கோலியாவின் பேரரசரானார்.
1930 – அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.
1937 – ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாட்சி ஜெர்மனியின் வான்படைகள் தீக்குண்டுகளை வீசியதில் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1972 – புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.
1975 – நியூயோர்க் நகர லாகோர்தியா விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர்.
1987 – 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.
1993 – உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஆங்காங்கில் அமைக்கப்பட்டது.
1996 – குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.
1997 – ஆங்காங்கில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த அனைத்து 1.25 மில்லியன் கோழிகளும் கொல்லப்பட்டன.
1998 – கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.
2001 – பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274 பேர் உயிரிழந்தனர்.
2011 – சமோவா, டோக்கெலாவ் ஆகிய நாடுகள் புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தின. இதன்படி, டிசம்பர் 29 இற்கு அடுத்தநாள் டிசம்பர் 31 ஆக அறிவித்தன.
2013 – உருசியா, வோல்கோகிராட் தொடருந்து நிலையம் ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் 18 பேர் கொல்லபட்டனர்.


பிறப்புகள்

1709 – எலிசவேத்தா பெட்ரோவ்னா, உருசிய அரசி (இ. 1762)
1766 – சார்லசு மேகிண்டோச், இசுக்கொட்டிய வேதியியலாளர் (இ. 1843)
1809 – வில்லியம் கிளாட்ஸ்டோன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1898)
1844 – உமேஷ் சந்திர பானர்ஜி, இந்திய தேசிய காங்கிரசின் 1-வது தலைவர் (இ. 1906)
1893 – ராசிக் பரீத், இலங்கை அரசியல்வாதி (இ. 1984)
1904 – குவெம்பு, இந்தியக் கவிஞர் (இ. 1994)
1910 – ரொனால்ட் கோஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2013)
1914 – பில்லி டிப்டன், அமெரிக்க பியானோ, சாக்சபோன் கலைஞர் (இ. 1989)
1930 – ரொபின் தம்பு, இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் (இ. 2000)
1937 – மாமூன் அப்துல் கயூம், மாலைதீவுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர்
1942 – ராஜேஷ் கன்னா, இந்திய நடிகர், தயாரிப்பாளர் (இ. 2012)
1945 – பிரேந்திரா, நேப்பாள மன்னர் (இ. 2001)
1953 – தாமசு பாக், பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 9வது தலைவர், செருமானியர்
1953 – ஆலன் ரஸ்பிரிட்சர், சாம்பியா-ஆங்கிலேய ஊடகவியலாளர்
1960 – டேவிட் பூன், ஆத்திரேலியத் துடுப்பாளர்
1974 – டுவிங்கிள் கன்னா, இந்திய நடிகை
இறப்புகள்

1170 – தாமஸ் பெக்கெட், ஆங்கிலேயப் பேராயர், புனிதர் (பி. 1118)
1720 – மரியா மார்கரெதா கிர்ச்சு, செருமனிய வானியலாளர் (பி. 1670)
1825 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (பி. 1748)
1834 – தோமஸ் மால்தஸ், ஆங்கிலேய பொருளாதார அறிஞர் (பி. 1766)
1890 – எகாக்கா கிளெசுக்கா, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1826)
1912 – இராபர்ட் புருசு ஃபூட், பிரித்தானிய நிலவியலாளர், தொல்பொருள் ஆய்வாளர் (பி. 1834)
1926 – ரெய்னர் மரியா ரில்கே, ஆத்திரியக் கவிஞர் (பி. 1875)
2009 – பழ. கோமதிநாயகம், தமிழகப் பாசனப் பொறியியல் வல்லுநர்
2012 – டோனி கிரெய்க், தென்னாப்பிரிக்க-ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர், ஊடகவியலாளர் (பி. 1946)
2015 – தமிழண்ணல், தமிழறிஞர் (பி. 1928)
சிறப்பு நாள்

விடுதலை நாள் (மங்கோலியா)

Sunday, 27 December 2020

வரலாற்றில் இன்று 28.12.2020 / history of today 28.12.2020

திசம்பர் 28 (December 28) கிரிகோரியன் ஆண்டின் 362 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 363 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் மூன்று நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்
கிமு 169 – இரண்டு நூற்றாண்டுகள் வெளியார் ஆட்சியின் பின்னரும், ஏழாண்டுகள் கிளர்ச்சியை அடுத்தும், எருசலேம் கோவில் மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டதன் அறிகுறியாக மெனோரா விளக்கு எரிக்கப்பட்டது. மெனோரா எட்டு நாட்கள் எரிந்து, யூதர்களின் அனுக்கா என்ற எட்டு நாள் கொண்டாட்டம் ஆரம்பமாகியது.
418 – முதலாம் போனிபாசு 42-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
457 – மஜோரியன் மேற்கு உரோமைப் முடிசூடினார்.
893 – ஆர்மீனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் துவின் என்ற பண்டைய நகரம் அழிந்தது.
1065 – இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மடம் திறந்துவைக்கப்பட்டது.
1308 – சப்பானில் அனசோனோ பேரரசரின் ஆட்சி தொடங்கியது.
1659 – மராட்டியர்கள் பிஜப்பூர் படைகளை கோலாப்பூர் சமரில் வென்றன.
1768 – தாய்லாந்து மன்னராக தக்சின் முடிசூடினார். தோன்புரி தாய்லாந்தின் தலைநகரமானது.
1835 – ஒசியோலா தனது செமினோலே படையினருடன் புளோரிடாவில் அமெரிக்க இராணுவத்திற்கெதிரான இரண்டாம் செமினோலே போரை ஆரம்பித்தார்.
1836 – தெற்கு அவுஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன.
1836 – மெக்சிகோவின் விடுதலையை எசுப்பானியா அங்கீகரித்தது.
1846 – அயோவா அமெரிக்காவின் 29வது மாநிலமாக இணைந்தது.
1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவுகளுக்கு உரிமை கோரியது.
1879 – இசுக்காட்லாந்தில் டண்டீ என்ற இடத்தில் மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் அதில் சென்றுகொண்டிருந்த தொடருந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் உயிரிழந்தனர்.
1885 – இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை மும்பை மாகாணத்தில் ஆரம்பித்தனர்.
1891 – யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் 30,000 ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டன.
1895 – பிரான்சின் லூமியேர் சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படத்தை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.
1895 – எக்சு-கதிர்கள் பற்றிய கண்டுபிடிப்பை வில்லெம் ரோண்ட்கன் வெளியிட்டார்.
1908 – இத்தாலி, சிசிலியில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 75,000 பேர் உயிரிழந்தனர்..
1929 – சமோவாவில் நியூசிலாந்து குடியேற்றக் காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.
1930 – மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.
1943 – சோவியத் அதிகாரிகள் கால்மீக்கிய இனத்தவரை சைபீரியாவுக்கும், மத்திய ஆசியாவுக்கும் நாடு கடத்தினர்.
1948 – அமெரிக்காவின் டிசி-3 விமானம் ஒன்று 32 பேருடன் மயாமியில் இருந்து 50 மைல்கள் தெற்கே காணாமல் போனது.
1956 – கம்யூனிஸ்டு தலைவர் சின் பெங், துங்கு அப்துல் ரகுமான் ஆகியோர் மலாயா அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு மலாயா, பாலிங் நகரில் கூடினர்.
1958 – கியூபாவின் சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.
1989 – அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நியூகாசில் நகரில் இடம்பெற்ற 5.6 அளவை நிலநடுக்கம் காரணமாக 13 பேர் உயிரிழந்தனர்.
1994 – விடுதலைப் புலிகளின் உப தலைவர்களில் ஒருவரான கோபாலசாமி மகேந்திரராஜா இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1999 – இலங்கை, புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் (29) என்ற பெண் இலங்கைக் கடற்படையினரால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
2006 – எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசுப் படைகள் சோமாலியா தலைநகர் மொகதிசுவைக் கைப்பற்றியதை அடுத்து இசுலாமியப் போராளிகள் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினர்.
2014 – இத்தாலி, ஏட்ரியாட்டிக் கடலில் நார்மன் அத்திலாந்திக் என்ற கப்பல் தீப்பற்றியதில் 9 பேர் உயிரிழந்தனர், 19 பேர் காணாமல் போயினர்.
2014 – சிங்கப்பூர் நோக்கிச் சென்ற இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 கரிமட்டா நீரிணையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 162 பேரும் உயிரிழந்தனர்.
பிறப்புகள்

1713 – இலாகைல்லே, பிரான்சிய வானியலாளர், பாதிரியார் (இ. 1762)
1798 – தாமசு ஜேம்சு எண்டர்சன், இசுக்கொட்டிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1844)
1856 – ஊட்ரோ வில்சன், அமெரிக்காவின் 28வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1924)
1882 – ஆர்த்தர் எடிங்டன், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1944)
1903 – ஜான் வான் நியுமேன், அங்கேரிய-அமெரிக்க கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1957)
1932 – திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (இ. 2002)
1934 – மேகி ஸ்மித், ஆங்கிலேய நடிகை
1936 – எஸ். பாலசுப்பிரமணியன், திரைப்பட தயாரிப்பாளர், விகடன் குழும உரிமையாளர் (இ. 2014)
1937 – ரத்தன் டாடா, இந்தியத் தொழொலதிபர்
1940 – அ. கு. ஆன்டனி, இந்திய அரசியல்வாதி
1944 – சாந்திரா மூர் பேபர், அமெரிக்க வானியலாளர்
1945 – பிரேந்திரா, நேப்பாள மன்னர் (இ. 2001)
1946 – ச. கனகரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1947 – நாஞ்சில் நாடன், தமிழக எழுத்தாளர்
1952 – அருண் ஜெட்லி, இந்திய அரசியல்வாதி
1954 – டென்செல் வாஷிங்டன், அமெரிக்க நடிகர்
1955 – லியூ சியாபோ, அமைதிக்கான நோபல் பரிசு நோபல் பரிசு பெற்ற சீன செயற்பாட்டாளர்
1964 – ஜி. கே. வாசன், தமிழக அரசியல்வாதி
1969 – லினசு டோர்வால்டுசு, லினக்சு கருனியை வடிவமைத்த பின்லாந்து-அமெரிகக் கணினி அறிவியலாளர்
1981 – சியென்னா மில்லர், பிரித்தானிய நடிகை
இறப்புகள்

1622 – பிரான்சிசு டி சேலசு, பிரான்சிய ஆயர், புனிதர் (பி. 1567)
1663 – பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி, இத்தாலியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1618)
1694 – இங்கிலாந்தின் இரண்டாம் மேரி (இ. 1662)
1708 – யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு, பிரான்சிய உயிரியலாளர் (பி. 1656)
1894 – பத்தாம் சாமராச உடையார், மைசூர் அரசர் (பி. 1863)
1994 – கோபாலசாமி மகேந்திரராஜா, விடுதலைப் புலிகளின் முன்னாள் உப தலைவர்
1999 – சாரதாம்பாள், இலங்கைக் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் (பி. 1970)
2003 – குஷபாவு தாக்கரே, இந்திய அரசியல்வாதி (பி. 1922)
2007 – அமர்நாத் சேகல், இந்திய சிற்பி, ஓவியர், கவிஞர் (பி. 1922)
2012 – எஸ். செல்வசேகரன், இலங்கை மேடை, வானொலி, திரைப்பட நடிகர்
2013 – ஆல்ட்டன் ஆர்ப், அமெரிக்க-செருமானிய வானியலாளர் (பி. 1927)
சிறப்பு நாள்

புனித மாசில்லாதோர் திருவிழா (கத்தோலிக்க திருச்சபை, இங்கிலாந்து திருச்சபை, லூதரனியம்) குடியரசு நாள் (தெற்கு சூடான்)

வரலாற்றில் இன்று 27.12.2020 / history of today 27.12.2020

நிகழ்வுகள் 36 – பிரிந்து சென்ற செங்சியா பேரரசை கைப்பற்றி இரண்டு நாட்களில் அதன் தலைநகர் செங்டூவைச் சூறியாடுமாறு ஆன் சீனத் தளபதி தனது படைகளுக்கு உத்தரவிட்டான். துருக்கியின் கிறித்தவப் பெருங்கோயில் ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது.
1703 – இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கும் ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது.
1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் பெரும்பாய்க்கப்பல் கரொலைனா அழிக்கப்பட்டது.
1831 – சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
1836 – இங்கிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான புயல் சசெக்ஸ் நகரில் இடம்பெற்றது. 8 பேர் உயிரிழந்தனர்.
1845 – பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.
1864 – இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
[1] 1911 – இந்தியாவின் தேசியப் பண் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் இசைக்கப்பட்டது.
1915 – யாழ்ப்பாணத்தின் முதல் பொது நூலகம் “நகுலேசுவரா நூல்நிலையம்” கீரிமலையில் திறக்கப்பட்டது.
[2] 1918 – செருமனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.
1922 – உலகின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் சப்பானின் ஓஷோ சேவைக்கு விடப்பட்டது.
1939 – துருக்கியில் ஏர்சின்கன் நகரில் 7.8 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32,700 பேர் உயிரிழந்தனர்.
1945 – 29 நாடுகளின் ஒப்புதலுடன் அனைத்துலக நாணய நிதியம் உருவாக்கப்பட்டது.
1949 – இந்தோனேசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.
1956 – தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1966 – உலகின் மிகப் பெரும் குகை மெக்சிக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.
1968 – சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 வெற்றிகரமாக பசிபிக் கடலில் இறங்கியது.
1978 – எசுப்பானியா 40 ஆண்டுகால பாசிச சர்வாதிகார ஆட்சியின் பின்னர் சனநாயக நாடானது.
1979 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானைக் கைப்பற்றியது. அதிபர் ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.
1985 – உரோம், வியன்னா விமான நிலையங்களில் பாலத்தீனத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – உருமேனியப் புரட்சி முடிவுக்கு வந்தது. 1996 – தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.
1997 – வடக்கு அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து துணை இராணுவக்குழுத் தலைவர் பில்லி ரைட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2000 – யாழ்ப்பாணம், தென்மராட்சி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற எட்டு பொதுமக்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2002 – செச்சினியாவின் குரோசுனி நகரில் மாஸ்கோ சார்பு அரச தலைமையகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 72 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்தனர்.
2004 – எஸ்ஜிஆர் 1806-20 என்ற காந்த விண்மீனில் நிகழ்ந்த வெடிப்பினால் அதன் கதிர்வீச்சு புவியை அடைந்தது.
2007 – பாக்கித்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
2008 – இசுரேல் காசா மீது மூன்று வாரத் தாக்குதலை ஆரம்பித்தது.

பிறப்புகள்
1571 – யோகான்னசு கெப்லர், செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1630)
1773 – ஜார்ஜ் கேலி, ஆங்கிலேயப் பொறியியலாளர், அரசியல்வாதி (இ. 1857)
1797 – கலிப், இந்தியப் புலவர் (இ. 1869)
1822 – லூயி பாஸ்ச்சர், பிரான்சிய வேதியியலாளர், நுண்ணுயிரியலாளர் (இ. 1895)
1895 – சர்தார் உஜ்ஜல் சிங், இந்திய அரசியல்வாதி (இ. 1983)
1901 – மார்லீன் டீட்ரிக், செருமானிய-அமெரிக்க நடிகை, பாடகி (இ. 1992)
1913 – விருகம்பாக்கம் அரங்கநாதன், இந்தி எதிப்புப் போராட்டத்தில் தீக்குளித்து உயிர்விட்டவர் (இ. 1965)
1945 – டேவிட் ராஜேந்திரன், ஈழத்து வானொலி, மேடை நாடகக் கலைஞர் (இ. 2013)
1948 – செரார்டு தெபர்டியு, பிரான்சிய-உருசிய நடிகர்
1965 – சல்மான் கான், இந்திய நடிகர்

இறப்புகள்
1834 – சார்லஸ் லாம், ஆங்கிலேயக் கட்டுரையாளர் (பி. 1775)
1914 – சார்லஸ் மார்ட்டின் ஹால், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (பி. 1863)
1922 – தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பிரித்தானிய பாளி அறிஞர் (பி. 1843)
1923 – அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், ஈபெல் கோபுரத்தை வடிவமைத்த பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (பி. 1832)
1976 – வ. நல்லையா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1909)
1979 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானித்தானின் 2வது அரசுத்தலைவர் (பி. 1929)
2007 – பெனசீர் பூட்டோ, பாக்கித்தானின் 11வது பிரதமர் (பி. 1953)
2016 – இரத்தினசிறி விக்கிரமநாயக்க, இலங்கை அரசியல்வாதி (பி. 1933)
2018 – சீனு மோகன், தமிழக மேடை, திரைப்பட நடிகர் (பி. 1956)

Wednesday, 18 June 2014

Wastewater Treatment Process

Wastewater Treatment Process 
        
         A delaide’s three major metropolitan wastewater treatment plants process more than 250 megalitres of wastewater every day.

The plants are located at: 
  • Christies Beach 
  • Glenelg 
  • Bolivar 
        Wastewater comprises a mixture of domestic sewage (waste from household toilets, sinks, showers and washing machines), industrial effluent, occasional run-off of surface water and ground water which has infiltrated into the sewers. Wastewater is 99.99% water, with a small amount of dissolved or suspended solid matter. At our treatment plants the wastewater undergoes a multi-stage treatment process to clean it before discharge or reuse.

Preliminary Treatment 

          The first stage of the treatment process uses screens to remove the larger solid inorganic material such as paper and plastics. This is followed by the removal of particles such as grit and silt which are abrasive to plant equipment.

Primary Treatment 
         
         Following preliminary treatment, wastewater is passed through a primary sedimentation tank where solid particles of organic material are removed from the suspension by gravity settling. The resultant settled primary sludge is raked to the centre of the tank where it is concentrated and pumped away for further treatment.

Secondary Treatment 
              
              This next stage is a biological process which breaks down dissolved and suspended organic solids by using naturally occurring micro-organisms. It is called the activated sludge process. The settled wastewater enters aeration tanks where air is blown into the liquid to provide oxygen for mixing and to promote the growth of micro-organisms. The “active biomass” uses the oxygen and consumes organic pollutants and nutrients in the wastewater to grow and reproduce. From the aeration tanks, the mixture of wastewater and micro-organisms passes into a secondary sedimentation tank (also known as a clarifier) where the biomass settles under gravity to the bottom of the tank and is concentrated as sludge. Some of this sludge is recycled to the inlet of the aeration tank to maintain the biomass, hence the name for the process – activated sludge. The remainder is pumped to anaerobic digesters for further treatment. The clarified wastewater is discharged from the secondary clarifier and passes through for Tertiary Treatment.

Tertiary Treatment 
            
             All wastewater treatment plants use disinfection for tertiary treatment to reduce pathogens, which are micro-organisms which can pose a risk to human health. Chlorine is usually dosed into the treated wastewater stream for disinfection. However, Bolivar uses large ponds in which sunlight and other micro-organisms reduce the pathogens. Additional treatment may be required if the treated wastewater is reused for purposes such as irrigation of food crops or where close human contact may result. Tertiary treatment, such as that provided at Bolivar through the Dissolved Air Flotation Filtration (DAFF) plant, produces a much higher standard of treated wastewater suitable for these purposes. The DAFF plant filters and disinfects the wastewater from the ponds allowing it to be used for direct irrigation of crops through the Virginia Pipeline Scheme.

Sludge Treatment 
           
           Sludge collected during the treatment process contains a large amount of biodegradable material making it amenable to treatment by a different set of micro-organisms, called anaerobic bacteria, which do not need oxygen for growth. This takes place in special fully enclosed digesters heated to 35 degrees Celsius, where these anaerobic micro-organisms thrive without any oxygen. The gas produced during this anaerobic process contains a large amount of methane. At the Christies Beach plant it is used to heat the digesting sludge to maintain the efficiency of the process. Elsewhere the gas fuel is used to generate electricity, with the waste heat used to maintain the digestion process. This electricity is used in the plant, reducing our use of non-renewable energy sources. Once the micro-organisms have done their work water is removed from the digested sludge through mechanical means such as centrifuging, or by natural solar evaporation in lagoons. The liquid remaining at the end of the process is usually pumped back into the aeration tanks for further treatment. The stable, solid material remaining, or biosolids, looks, feels and smells like damp earth and makes ideal conditioner for soil.